விழுப்புரம் தனியார் லாட்ஜில் மதுரை வாலிபர் தற்கொலை கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை

விழுப்புரம், நவ. 4:  மதுரையை சேர்ந்தவர் நாராயணன் (38). தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 28ம் தேதி தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை காரணமாக விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே நேற்று இரவு திடீரென லாட்ஜில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விடுதி உரிமையாளர் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நாராயணன் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் நாராயணன் அறையில் இருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் எனக்கு வாழ பிடிக்கவில்லை, அதனால் தற்கொலை செய்து கொண்டேன், என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>