×

திசையன்விளையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

திசையன்விளை, நவ.4: திசையன்விளையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் பேரூராட்சி தலைவர் சேம்பர் செல்வராஜ் தலைமை வகித்தார். கீரைக்காரன்தட்டு விவசாய சங்க தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். கூட்டத்தில் விஜயநாராயணம் குளம் நடுமடையிலிருந்து சுவிசேஷபுரம் குளம் வரை தனியாக கால்வாய் வெட்டுவதற்கு அரசிடம் முறையிடுவது, தாமிரபரணி -கருமேனியாறு-நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில் புத்தன்தருவை குளத்தை சேர்க்க வேண்டும், கால்வாய் வெட்டப்படும் பாதையில் உள்ள பொன்னாக்குடியில் 6 வழிசாலை மேம்பாலம், செங்குளம் இரட்டை ரயில் பாலம் பணிகளை விரைந்து துவங்குவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும்,

உயரதிகாரிகளையும் டெல்லியில் சென்று சந்தித்து முறையிடுவது, திட்டத்தின் முதல் கட்டத்தில் உள்ள திடியூர் பாலம் போன்று மூன்று கட்டங்களிலும் நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்க தமிழக பொதுப்பணித் துறையிடம் முறையிடுவது, சுவிசேஷபுரம் குளத்தை ஒரு மீட்டர் ஆழப்படுத்த கேட்டுக் கொள்வது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஓய்வுபெற்ற பேரூராட்சி செயல் அலுவலர் நாமத்துரை, முன்னாள் லயன்ஸ் கவர்னர் சுயம்புராஜன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ஆல்பர்ட், பாஜ மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் லிங்கபாண்டி, ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : Farmers Consultative Meeting ,
× RELATED விவசாயிகள் ஆலோசனை கூட்டம் ஜமுனாமரத்தூரில்