×

சிறுபான்மை கைவினை கலைஞர்களுக்கு டாம்கோ மூலம் கடன் உதவி கலெக்டர் தகவல்

வேலூர், நவ.4:வேலூர் மாவட்டத்தில் சிறுபான்மை கைவினை கலைஞர்களுக்கு டாம்கோ மூலம் கடன் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
சிறுபான்மையினத்தை சேர்ந்த கைத்தறி (ம) கைவினை கலைஞர்களுக்காக ‘விராசாத்‘ என்னும் புதிய கடன் திட்டத்தின் மூலம் கைவினை பொருட்களுக்கான மூலப்பெருட்களை கொள்முதல் செய்வதற்கு கடன் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கடன் பெறும் கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். மற்ற கடன் திட்டங்களை காட்டிலும் இதன் வட்டி விகிதமானது ஆண்டிற்கு ஆண் பயனாளிகளுக்கு 5 சதவீதம் பெண் பயனாளிகளுக்கு 4 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சிறுபான்மையின கைவினைஞர்களின் ஆண்டு வருமான கிராமப்புறங்களில் ₹98 ஆயிரத்துக்கு மிகாமலும், ₹1.20 லட்சம் மிகாமலும் இருத்தல் வேண்டும்.

இக்கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் வேலூர் மாவட்டத்தில் வசிக்கும், சிறுபான்மையின கைவினைஞர்கள் தங்களது ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் மற்றும் திட்ட தொழில் அறிக்கையுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் அலுவலகம், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அருகிலுள்ள அதன் கிளைகள் நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை வங்கிகளில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamco ,Minor Craftsmen ,
× RELATED வேலூர் அருகே காரில் கடத்தல்: பாஜக...