ஆட்டோ ஓட்டுநர்கள் திடீர் சாலை மறியல்

பூந்தமல்லி: பூந்தமல்லியை சேர்ந்தவர் பஷீர்(30) ஆட்டோ ஓட்டுநர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்டோவில் பயணிகளை ஏற்றி செல்வதில்  ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சில ஆட்டோ டிரைவர்கள் பஷீரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பஷீர் தன்னை சக ஆட்டோ  டிரைவர்கள் தாக்கிவிட்டு, தான் அணிந்திருந்த நகையை பறித்து சென்று விட்டதாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து 20க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள்  திரண்டு வந்து பூந்தமல்லி பேருந்து  நிலையம் முன்பு டிரெங்க் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  அப்போது அங்கு வந்த பூந்தமல்லி உதவி கமிஷனர் சுதர்சன், ஆட்டோ டிரைவர்களை கைது செய்து விசாரிக்கிறார்.

Related Stories:

>