பணம் வராததால் ஆத்திரம் 3 ஏடிஎம் மெஷின் உடைப்பு: வாலிபர் கைது

துரைப்பாக்கம்: மேற்கு வங்காளத்தை சேர்ந்த புருஷோத்தம் பாண்டே (34), பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தங்கி, கார்பென்டராக  வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு மது போதையில், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பில் அடுத்தடுத்து உள்ள 3 ஏடிஎம்களில்  பணம் எடுக்க சென்றபோது, 3 மெஷினிலும் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்து, ஏடிஎம் மெஷின்களை அடித்து உடைத்துவிட்டு தப்பினார்.  இதுகுறித்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து, ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா  பதிவுகளை கொண்டு, புருஷோத்தம் பாண்டேவை கைது செய்தனர்.

Related Stories:

>