பூங்காக்களை பராமரிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சாத்தூர், நவ.4:  சாத்தூரில் உள்ள பூங்காக்களை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சீரமைக்க எம்.எல்.ஏவுக்கு பொதுமக்கள் கோரிக்கை. வைத்துள்ளனர். சாத்தூர் வைப்பாற்று அருகில் இருக்கும் பழைய பூங்கா, பைப்பாஸ் சாலையில் இருக்கும் சொக்கலிங்க நாடார் நினைவு பூங்கா, பெரியார் நகரில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும் 3வது வார்டு பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா, ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள அரசு மருத்துவமனை அருகில் இருக்கும் பூங்கா ஆகிய பூங்காக்கள் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. அப்பகுதியில் சிறுவர்கள் விளையாட இடமின்றி சாலையில் விளையாடுகின்றனர். பெரியவர்களும் நடைபயிற்சி செய்ய இடமில்லாமல் தவித்து வருகின்றனர். எனவே இந்த அனைத்து பூங்காக்களையும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சீரமைத்து தருமாறு சாத்தூர் எம்.எல்.ஏவுக்கு பொதுமக்கள் கோரிக்கை. வைத்துள்ளனர்.

Related Stories:

>