×

சண்முகா நதி அைண நீர்மட்டம் உயர்ந்தது

உத்தமபாளையம், நவ.4: ராயப்பன்பட்டி சண்முகா நதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளதாக்கில் அமைந்துள்ள முக்கியமான நீர்தேக்கமாக சண்முகா நதி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணையில் கடந்த ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை பெய்த மழையினால் அதிசயிக்கத்தக்க வகையில் நீர்வரத்தே இல்லை. அணையின் மொத்த உயரம் 52.5 அடியாகும். இங்கு தண்ணீர் திறக்கப்பட்டால் ஓடைப்பட்டி, சீப்பாலகோட்டை, ஆனைமலையன்பட்டி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஊர்கள் பயன்பெறும். ஆனால் தண்ணீர் நீர்மட்டம் கடந்த 6 மாதமாகவே 28 அடியை தாண்டவில்லை. நீர்வரத்து பாதைகளை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து, தங்களது தோட்ட நிலங்கள், கிணறுகளுக்கு திருப்பிவிட்டதாலேயே சண்முகா நதிக்கு தண்ணீர் வரவில்லை என்ற புகார் எழுந்தது. இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக அணைக்கு 11 கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் 31.40 அடியாகி உள்ளது.

Tags : river ,Shanmuga ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால்...