பட்டாசு கடை உரிமம் கோரி விண்ணப்பிக்க இன்று கடைசி

திருச்சி, நவ.4: திருச்சி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக்கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் தேதியானது 4ம்தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய விண்ணப்பங்களை, வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008க்குட்பட்டு, உரிய ஆவணங்களுடன் இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>