×

அரியலூர் எஸ்பி எச்சரிக்கை விபத்தில் இறந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

ஜெயங்கொண்டம், நவ. 4: ஜெயங்கொண்டம் அருகே விபத்தை ஏற்படுத்தி இறந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் மகன் பாரதிராஜா. இவர் 2015ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் தனது கிராமத்திற்கு வந்தார். மீன்சுருட்டி அருகே சொக்கலிங்கபுரம் பகுதியில் சென்றபோது பைக் மீது அரசு பஸ் மோதியது. இதில் படுகாயமடைந்த பாரதிராஜா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பாரதிராஜா தந்தை ராஜேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்ககோரி அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2015ம் ஆண்டு ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் இறந்துபோன பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக ரூ.14,72,722 தொகையை சென்னை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வழங்க வேண்டுமென 2018ம் ஆண்டு உத்தரவிட்டார். 2018ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி கோர்ட் உத்தரவை நிறைவேற்றகோரி மீண்டும் கோர்ட்டில் ராஜேந்திரன் மனுதாக்கல் செய்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்து விபத்தில் இறந்துபோன பாரதிராஜாவின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக ரூ.14,72,722யை சென்னை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் கும்பகோணத்தில் இருந்து சென்னையை நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை நிறுத்தி ஜப்தி செய்து அரியலூர் கோர்ட்டுக்கு பணியாளர் ஓட்டி சென்றார்.

Tags : warning accident ,Ariyalur SP ,
× RELATED அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்...