ஊதிய உயர்வுக்கேற்ப ஓய்வூதியம் வழங்க கோரி எல்ஐசி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் 2 மணி நேர தர்ணா போராட்டம்

கரூர், நவ. 4: ஊதிய உயர்வுக்கேற்ப ஓய்வூதியம் வழங்க கோரி எல்ஐசி ஒய்வூதியர்கள் சங்கம் சார்பில் கரூர் எல்ஐசி கிளை வளாகத்தில் 2 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. ஊதிய உயர்வுக்கு ஏற்ப ஒய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை 30 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்ைககளை வலியுறுத்தி 11 மணி முதல் 1மணி வரை இரண்டு மணி நேர தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.கரூர் எல்ஐசி கிளை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எல்ஐசி ஒய்வூதியர் சங்க தலைவர் கிருஷ்ணமாச்சாரி தலைமை வகித்தார். கரூர் கிளை நிர்வாகி சிவராமகிருஷ்ணன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories:

>