வேலாயுதம்பாளையம் போலீஸ்காரர் மாரடைப்பால் சாவு

கரூர், நவ. 4: கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் ஒருவர் நேற்று அதிகாலை மாரடைப்பினால் இறந்தார். கரூர் வேலாயுதம்பாளையம் சுந்தரம்பாள் நகரில் வசித்து வந்தவர் மோகன்ராஜ்(40). இவர், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு தவிட்டுப்பாளையம் செக்போஸ்டில் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. ஆபத்தான நிலையில் உறவினர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது செல்லும் வழியிலேயே இறந்ததாக கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>