×

முதல்வர் வருகையையொட்டி கோத்தகிரி பேரூராட்சியில் தூய்மை பணி தீவிரம்

ஊட்டி, நவ. 4:  முதல்வர் வருகையையொட்டி கோத்தகிரி டானிங்டன் பகுதியில் தூய்மை பணிகளில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வளர்ச்சிப்  பணிகளை துவக்கி வைக்கவும், மருத்துவ கல்லூரி கட்டுமான பணி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக  தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி வரும் 6ம் தேதி ஊட்டி வருகிறார். இவர்,  அன்றைய தினம் காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக ஊட்டி  வருகிறார். பின், தமிழகம் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். ஊட்டியில் நடக்கும் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிற்பகல்  திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார். முன்னதாக மேட்டுப்பாளையத்தில்  இருந்து வரும் எடப்பாடி பழனிச்சாமி, கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள  எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதனால், தற்போது கோத்தகிரி டானிங்டன் பகுதி மற்றும் எம்.ஜி.ஆர். சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தூய்மை பணிகளில் கோத்தகிரி  பேரூராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில்  இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

Tags : cleaning work ,municipality ,visit ,Chief Minister ,Kotagiri ,
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை