×

கேரளாவில் இரு கட்டமாக உள்ளாட்சி தேர்தல்

பாலக்காடு, நவ.4: கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது. கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளான கிராம பஞ்சாயத்து, பிளாக் பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியாக உள்ளது. இதற்கிடையே, கட்சித்தலைவர்கள் தலைமையில் வேட்பாளர்கள் பட்டியல், கட்சி அலுவலங்களில் தயாராகி வருகிறது. பாலக்காடு மாவட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., பா.ஜ., கட்சி வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வருகின்றன. பாலக்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூ., தலைமையிலான இடதுசாரி முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பா.க., கட்சி வேட்பாளர்கள் பட்டியல் நிர்ணயம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூ., காங்கிரஸ், பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்து வரும் நிலையில் சுவர்களில் கட்சி சின்னங்கள் மட்டும் கேரள-தமிழக எல்லையோர கிராமங்களில் வரையப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் அறிக்கை வெளி வந்தவுடன் வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவை பொருத்த வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மும்முனைப்போட்டி நிலவி வருகிறது.

Tags : body elections ,Kerala ,
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...