×

தீபாவளியையொட்டி வெளியூர்களுக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுமா?

பொள்ளாச்சி, நவ. 4: பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் உள்ள, பழைய (மத்திய பஸ் நிலையம்) மற்றும் புதிய பஸ் நிலையத்திலிருந்து பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களையொட்டி கூடுதல்  சிறப்பு பஸ் இயக்கப்படும்.
 கடந்த ஆண்டில், தீபாவளி பண்டிகையொட்டி மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கோவை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் என சுமார் 30க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டில், வரும் 14ம் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி பண்டிகை வருகிறது. கொரோனா ஊரடங்கானது, பெருமளவு தளர்வுகளுடன் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பொள்ளாச்சி மத்திய பஸ் நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோவையிலிருந்து பொள்ளாச்சி வழியாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு இயக்கப்படும் தொலை தூர விரைவு பஸ்கள் அனைத்தும் தீபாவளியையொட்டி விரைந்து புக்கிங் ஆகியுள்ள நிலையில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொள்ளாச்சியிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது குறித்த எந்தவித தகவலும் வெளியாகவில்லை. அதிகாரிகள் கூறுகையில், கொரோனா ஊரடங்கு பெருமளவு தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், தீபாவளி பண்கையையொட்டி வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. இருப்பினும், மேலிடத்திலிருந்து முறையான அட்டவணையுடன் உத்தரவு வரபெற்றால் மட்டுமே சிறப்பு பஸ் எப்போது இயக்கப்படும் என தெரியவரும்’ என்றனர்.

Tags : foreigners ,Diwali ,occasion ,
× RELATED ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு நடத்தி ரூ.57 லட்சம் மோசடி செய்த பெண் கைது