×

தீபாவளி பண்டிகையையொட்டி பூம்புகாரில் கைத்தறி சேலைகள் விற்பனை துவக்கம்

ஈரோடு, நவ. 4:  தீபாவளி பண்டிகையையொட்டி ஈரோடு பூம்புகாரில் கைத்தறி சேலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கியது. தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையம், ஈரோடு மேட்டூர் ரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே செயல்படுகிறது. கைவினைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கில், அவர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைத்தறி சேலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 13ம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது.

இது குறித்து பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சரவணன் கூறியதாவது: கைத்தறி சேலைகள் மற்றும் கண்காட்சியில் நவீன டிசைன்களில் கைத்தறியினால் தயாரிக்கப்பட்ட மதுரை சுங்குடி சேலைகள், மதுரை காட்டன் சேலைகள், செட்டி நாடு காட்டன் சேலைகள், காட்டன்&சில்க் சேலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், சேலைகளின் பார்டரில் பொம்பை, மயில், புத்தர், ராதா கிருஷ்ணர் போன்ற டிசைன்களும் இடம் பெற்றுள்ளன. இதில், சேலைகள் ரூ.300 முதல் ரூ.2 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து சேலைகளுக்கும் 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அனைத்து கிரிடிட் மற்றும் டெபிட் கார்டுகள் எவ்வித சேவை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளப்படும். வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கைவினைக் கலைவண்ணம் மிகுந்த சேலைகளை வாங்கி, கைத்தறித் தொழிலாளர்களின் வாழ்க்கை வளம்பெற உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Poompuhar ,Deepavali ,
× RELATED நெருங்கும் தீபாவளி பண்டிகை: பட்டாசு உற்பத்தி பணிகள் சிவகாசியில் தீவிரம்