மலர்வளையம் வைத்து மரியாதைமுன்னாள் நகர செயலாளர் நினைவு தினத்தையொட்டி

திருவண்ணாமலை, நவ.3: திருவண்ணாமலையில் திமுக முன்னாள் நகர செயலாளர் டி.என்.பாபு 17வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.திருவண்ணாமலை நகர திமுக முன்னாள் செயலாளர் டி.என்.பாபு 17வது ஆண்டு நினைவு தினம் நேற்று அணுசரிக்கப்பட்டது. அதையொட்டி, திருவண்ணாமலை ஈசான்ய மயானத்தில் உள்ள டி.என்.பாபு நினைவிடத்தில், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கு.பிச்சாண்டி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை, முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி சுந்தரேசன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>