×

கல்லறை திருநாள் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி, நவ.3:கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், நேற்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதியை இறந்தவர்களை நினைவு கூறும் வகையில், கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். நேற்று கிருஷ்ணகிரி, பர்கூர், கந்திகுப்பம், ராயப்பனூர், சுண்டம்பட்டி, எலத்தகிரி, காத்தாம்பள்ளம், அச்சமங்கலம், பெரியஏரிகோடி, புஷ்பகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறைகளில், கிறிஸ்தவ மக்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் சமாதியை பூக்களால் அலங்கரித்து பிரார்த்தனை செய்தனர். கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தை மலர்களால் அலங்கரித்து, பிரார்த்தனை செய்தனர்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, நடப்பாண்டு ஜெபவழிபாடு நடைபெறவில்லை. அதற்கு பதிலாக பாத்திமா அன்னை ஆலயத்தில் சமூக இடைவெளியுடன் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மாலை தூய பாத்திமா ஆலய பங்கு தந்தை இசையாஸ் தலைமையில், 10க்கும் மேற்பட்ட பாதிரியார்கள், அனைத்து கல்லறைகளிலும் மந்திரித்தனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு