கட்டிட மேஸ்திரியிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 ரவுடி கைது

ஆவடி: ஆவடி புதுநகர் 6வது தெருவை சேர்ந்தவர் சேகர்(45). கட்டிடமேஸ்திரி. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கடைக்கு புறப்பட்டார். காமராஜர் நகர் பள்ளிக்கூட தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது, 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். மேலும், கத்தியை காட்டி மிரட்டி பாக்கெட்டில் இருந்த ரூ.500ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து, ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதி  கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ஆவடி காமராஜ் நகர் வரதராஜன் தெருவை சேர்ந்த லட்சுமணன்(32), அதேபகுதி புத்தர் தெருவை சேர்ந்த மணிகண்டன்(30), திருவேற்காடு சிவன் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ்(26) ஆகிய பிரபல ரவுடிகள் என எனத்தெரியவந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த ரவுடிகள் லட்சுமணன், தினேஷ் இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு ரவுடியான மணிகண்டனை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Related Stories:

>