×

நிலுவை தொகை வழங்ககோரி கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திருத்தணி: கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்புக்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்ககோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முன் தமிழ்நாடு கரும்பு  விவசாயிகள் சங்கம் சார்பில் கரும்புக்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்ககோரி தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று துவங்கியது. இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளார் பெருமாள் தலைமை வகித்தார்.

இந்த போராட்டத்தின்போது, விவசாயிகள் கடந்த 2019-20ம் ஆண்டில் கரும்பு அனுப்பியவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை, ரூ.10.10 கோடியும், கடந்த 2016-17ம் ஆண்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு ரூ.22 கோடியும் நிலுவை தொகை வழங்க வேண்டும். சர்க்கரை ஆலையின் அரவை திறன் மேம்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், 50க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் வரும் 6ம் தேதி வரை நடத்த விவசாயிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

Tags : Sugarcane farmers ,
× RELATED வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில்...