நெதர்லாந்திலிருந்து கடத்திய போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: நெதர்லாந்து நாட்டிலிருந்து நேற்று சென்னை விமான நிலையத்திற்கு சரக்கு விமானத்தில் வந்திருந்த கூரியர் பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சென்னை முகவரிக்கு  வந்திருந்த 2 பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதில் இருந்த முகவரி, தொடர்பு எண்கள் போலியானவை என்று தெரியவந்தது. இதையடுத்து பார்சல்களை பிரித்தபோது 100 போதை மாத்திரைகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.4 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>