×

போதிய இடவசதி இல்லாததால் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

சிவகாசி, நவ.3: சிவகாசியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆவண பாதுகாப்பு அறை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், பத்திரங்கள் தொலைந்து போகும் நிலை உள்ளது. சிவகாசியில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட காலி இடங்கள், விளை நிலங்கள், வீடுகள் மற்றும் திருமண பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவு செய்யும் பணி நடக்கிறது. ஒரு சார்பதிவாளர், கண்காணிப்பாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், அலுவலர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்திலேயே சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் தான் அதிகம் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. முத்திரை மற்றும் பதிவு கட்டணமாக ரூ.3 கோடி வரை வருவாய் ஈட்டப்படுகிறது. இதுதவிர திருமண பதிவு, வாடகை ஒப்பந்தம், கட்டிட ஒப்பந்தம் போன்றவற்றின் மூலமும் வருவாய் கிடைக்கிறது.சிவகாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் போதிய இடவதி இல்லை. இதனால் பத்திரபதிவிற்காக வரும் பொதுமக்கள் அலுவலகம் முன்பு அமர்ந்திருக்க வேண்டிய அவலம் உள்ளது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை முறையாக பாதுகாக்க தனி அறை எதுவும் இல்லை. இதனால் பழைய ஆவணங்கள் பராமரிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது பத்திரப்பதிவு அறையில் டோக்கன் வரவழைக்கப்பட்டு பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பத்திரப்பதிவு செய்ய வேண்டியவர்கள் அலுவலகம் திறப்பதற்கு முன்பே வந்து சார்பதிவாளர் அலுவலகம் முன்புள்ள சாலையில் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே சிவகாசி பத்திர பதிவு அலுவலகத்திற்கு ஒரு புதிய கட்டிடம் கட்டி தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : building ,
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...