×

உயிரை துச்சமென மதித்து பணியாற்றிய எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் தற்காலிக செவிலியர்கள் கோரிக்கை

தேனி. நவ. 3: தேனி மாவட்டத்தில் சுகாதாரத்துறை மூலமாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையங்கள் துவங்கப்பட்டன இவற்றில் தற்காலிக செவிலியர்கள் மாதம் ரூ.14 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்டனர்.  இவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று குறையத் தொடங்கியது. இதனால் மாவட்ட அளவில் 57 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் திடீரென தற்காலிக செவிலியர்கள் 35 பேரையும் பணிநீக்கம் செய்து மாவட்ட சுகாதார துறை நடவடிக்கை எடுத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தேனி கலெக்டரை சந்தித்து கோரி க்கை மனு நேற்று அளித்தனர்.

Tags : nurses ,
× RELATED தமிழகத்தில் தற்காலிகமாக பணியாற்றி...