×

தனியார் நிதி நிறுவனம் மூடல் பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் இன்ஸ்பெக்டர் தகவல்

உத்தமபாளையம், நவ.3: உத்தமபாளையத்தில் இயங்கி வந்த தனியார் சிட்பண்ட் நிறுவனம் திடீரென மூடப்பட்டது. இதில் டெபாஸிட், மாதச்சீட்டு, ஏலச்சீட்டு உள்ளிட்டவை போடப்பட்டு மக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. இதன் பங்குதாரராக இருந்த அஜீஸ்கான் சில மாதங்களுக்கு முன்பு இறந்தார். மற்றொரு பங்குதாரான ஜமாலுதீன் பணத்தை திரும்ப தர கைவிரித்தார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டங்களை நடத்தினர்.இதனை அடுத்து திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி நேற்று கம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர் கூறுகையில், `` தனியார் சிட்பண்ட் மூடப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடந்து வருகிறது. இதில் மொத்தம் ரூ.23 கோடி வரை தான் கொடுக்கல், வாங்கல் நடந்ததாக கூறப்பட்டாலும், எவ்வளவு தொகை என்பது புகாரின் முடிவில்தான் தெரியவரும்.  பாதிக்கப்பட்ட அனைவரும் உரிய புகார் தரலாம். நிச்சயமாக வழக்குப்பதிவிற்கு பின்பு புகாரில் கூறப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவர்.’’ என்று கூறினார். நிகழ்வில் உத்தமபாளையம் டிஎஸ்பி சின்னக்கண்ணு, இன்ஸ்பெக்டர் முருகன் கலந்து கொண்டனர்.

Tags : institution ,
× RELATED நியோமேக்ஸ் வழக்கு: போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு