தேவகோட்டை அருகே ரேஷன் கடை ஊழியருக்கு அரிவாள் வெட்டு

தேவகோட்டை, நவ. 3:  தேவகோட்டை அருகே பூசலாகுடியை சேர்ந்தவர் பாஸ்கரன் (50). இவர் வெங்களூர் பஞ்சாயத்து ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை ரேஷன் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு புறப்பட்டார். குலக்குடி கண்மாய் அருகே வந்த போது வந்த போது இவரை 3 பேர் கும்பல் வழிமறித்தது. இதில் பாவனக்கோட்டையை சேர்ந்த காளிமுத்து என்பவர் பாஸ்கரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். பின்னர் 3 பேரும் தப்பியோடி விட்டனர். இதில் படுகாயமடைந்த பாஸ்கரனை தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பாஸ்கரன் அளித்த புகாரின்பேரில் ஆறாவயல் போலீசார் வழக்குப்பதிந்து காளிமுத்து உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு போஸ் என்பவரால் பாஸ்கரன் வெட்டப்பட்டு உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More