×

சிங்கம்புணரி பகுதியில் தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்

சிங்கம்புணரி, நவ. 3:  சிங்கம்புணரி பகுதியில் மழை இல்லாததால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் உள்ள காளாப்பூர், கோயில்பட்டி, சூரக்குடி, பிரான்மலை உள்ளிட்ட கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. கடந்த வாரங்களில் பெய்த மழையை நம்பி நெல் நடவு பணி நடைபெற்றது. நடவு முடிந்த பின்பு மழை இல்லாததால் கண்மாய், ஊரணிகள் வறண்டு கிடக்கின்றன. இதனால் தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன.சிலர் பயிரை காப்பாற்ற விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பாய்ச்சி வருகின்றனர். மழை பெய்தால் மட்டுமே நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்பதால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த விவசாயி சுகுமார் கூறுகையில், ‘ஒரு ஏக்கர் நெல் நடவு செய்ய இதுவரை ரூ.5 ஆயிரம் செலவு ஏற்பட்டுள்ளது. மழை இல்லை என்றால் பணமும் எங்களது உழைப்பும் வீணாகிவிடும்’ என்றார்.

Tags : Singampunari ,area ,
× RELATED வாக்குச்சாவடிக்குள் வலிப்பு வந்து...