×

விசி கட்சியை தடை செய்ய வேண்டும்

கும்பகோணம், நவ. 3: கும்பகோணம் ஆர்டிஓ விஜயனிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் குருமூர்த்தி தலைமையில் நகர தலைவர் செந்தில் முருகன், நகர செயலாளர் பாலாஜி மற்றும் கட்சியினர் வந்து மனு அளித்தனர். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தொடர்ந்து இந்துசமய விரோத போக்கை கடைபிடித்து இந்துக்கள் வழிபடும் தெய்வங்கள், கலாசாரங்களை கேலி கிண்டல் செய்து பேசி வருகிறார். தற்போது உச்சகட்டமாக பெண்களை இழிவுப்படுத்தி பதற்றத்தை உருவாக்கி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடு தொடர்ந்து பேசி வருவது மட்டுமல்லாமல் அதை நியாயப்படுத்தும் வகையில் ஊடக வாயிலாக தினம்தோறும் கருத்துகளை தெரிவித்து வருகிறார். எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும். கட்சி தலைவர் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : party ,
× RELATED காங்கிரஸில் இணைய நடிகர் மன்சூர் அலிகான் விண்ணப்பம்..!!