×

புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் பேட்டி கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை

அரியலூர், நவ. 3: கல்லறை திருநாளையொட்டி அரியலூர் மாவட்டத்தில் முன்னோர்கள் ஆன்ம சாந்தியடைந்த கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். அதன்படி அரியலூர் தூய லூர்து அன்னை ஆலய கல்லறை தோட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களது மூதாதையர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி மலர்களால் அலங்கரித்தனர். பின்னர் அவர்களுக்கு பிடித்த உணவு, பழங்களை படையலிட்டு மெழுகுவர்த்தி, ஊதுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். கல்லறை தோட்டத்தில் மறைந்த ஆத்மாக்கள் இளைப்பாற பங்குத்தந்தை டோமினிக் சாவியோ தலைமையில் சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.

இதேபோல் குலமாணிக்கம் இஞ்ஞாசியர், புதுக்கோட்டை தூய மங்கள அன்னை, ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. மேலும் திருமானூர், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் புனித பாத்திமா அன்னை ஆலயம், வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை ஆலயம், தென்னூர் புனித லூர்து அன்னை ஆலயம், நெட்டலக்குறிச்சி புனித சவேரியார் ஆலயம், ஆண்டிமடம் மார்த்தினார் ஆலயம், வடவீக்கம் உபகார அன்னை ஆலயம், குமிளங்குழி புனித சவேரியார் ஆலயம், பட்டணங்குறிச்சி லூர்து அன்னை ஆலயம், கூவத்தூர் அந்தோணியார் ஆலயம், கண்டியங்குப்பம் சலேத் மாதா ஆலயம், விளப்பள்ளம் செபஸ்தியார் ஆலயம், அகினேஸ்புரம் அகினேசம்மாள் ஆலயம், கீழ்நெடுவாய் புனித அன்னம்மாள் ஆலயங்களில் பங்குத்தந்தையர்கள் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

Tags : Christians ,Collector Interview Cemetery ,
× RELATED ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்