×

நாகையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு

நாகை, நவ.3: கல்லறைத் திருநாளை முன்னிட்டு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலி கொரோனா எளிய முறையில் நடந்தது. இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமாக கல்லறை திருநாளை கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். இதன்படி நேற்று கல்லறை திருநாளை முன்னிட்டு நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிறிஸ்தவர்கள் முன்னோர்களின் கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து வழிபாடு நடத்தினர். இதைத் தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று சிறப்பு திருப்பலியும் நடந்தது. வெளி மாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டு பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்களின் சமாதிக்கு பங்குத் தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. பேராலய அதிபர் பிரபாகர், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குத் தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணியில் கடந்த 2004ம் ஆண்டு சுனாமியால் இறந்தவர்களின் சடலம் புதைக்கப்பட்ட கல்லறை தோட்டம் கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ளது. இங்கு வேளாங்கண்ணி பேராலயத்தின் சார்பில் கல்லறை திருநாள் வழிபாடு நடந்தது.

Tags : Naga ,
× RELATED நாகையில் போக்குவரத்து மாற்றம்