தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் நாளை திருப்பூர் வருகை

திருப்பூர், நவ. 3: திருப்பூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தமிழக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவை கருத்தில் கொண்டு மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், அந்தந்த மாவட்டங்களில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் மற்றும் பொதுப்பிரச்னைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்படும் மனுக்களை பெற்று வருகிறார்கள். மனுக்களை பெறுவதற்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் வருகிற 4ம் தேதி காலை 9 மணிக்கு திருப்பூர் அவிநாசி ரோடு திருமுருகன்பூண்டியில் உள்ள பப்பீஸ் ஓட்டலுக்கு வருகிறார்கள். எனவே, தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய பொது அம்சங்கள் மற்றும் நமது மாவட்டத்தில் உள்ள பொதுப் பிரச்னைகள் மற்றும் தேவைகள் குறித்து நேரில் தெரிவிக்க விரும்பும் அனைத்து தொழில் துறை அமைப்பை சேர்ந்தவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக கொடுக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Related Stories:

>