கும்மிடிப்பூண்டி, நவ.1: மத்திய அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணாவின் பெயரை நீக்க கூடாது. அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்க கூடாது. தான் தோன்றித்தனமாக செயல்படும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவை கைவிடவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இதனை செயல்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.