வட மாநில வாலிபரை வெட்டி வழிப்பறி: 2 பேர் கைது

திருப்போரூர், நவ.1: சாம் மாநிலத்தை சேர்ந்தவர் நஸ்ரூம் அஸ்லம். (36). கேளம்பாக்கம் அருகே தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி நஸ்ரூம் அஸ்லாம், பணி முடிந்து அவர் தங்கியுள்ள இடத்துக்கு புறப்பட்டார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர், அஸ்லமை மறித்து, அரிவாளால் வெட்டிவிட்டு, அவரிடம் இருந்த செல்போன், பணத்தை கொள்ளைடித்து சென்றனர். இதில் படுகாயமடைந்த அஸ்லம் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புகாரின்படி கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், தையூர் இளவந்தாங்கலை சேர்ந்த மணிகண்டன் (19), சுனில்குமார் (20) ஆகியோர் என தெரிந்தது. இதையடுத்து அவர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 2 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories:

>