×

வேலூர் லாரி ஷெட்டில் நடந்து வந்த அடிப்படை பணிகள் நிறைவடையாததால் பஸ்கள் இயக்கம் தள்ளி வைப்பு : 16 மீட்டர் தூரத்திற்கு சென்டர் மீடியன் அகற்றம்

வேலூர், நவ. 1: வேலூர் லாரி ஷெட்டில் அடிப்படை பணிகள் நிறைவடையாததால் இன்று இயக்கப்பட இருந்த திருவண்ணாமலை, கடலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கம் தள்ளி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பழைய பைபாஸ் சாலையில் பஸ்கள் திரும்ப இடையூறாக உள்ள இடத்தில் சென்டர் மீடியன் அகற்றப்பட்டது. வேலூர் புதிய பஸ் நிலையம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலைய கட்டுமான பணிகள் நடப்பதால் திருவண்ணாமலை, குடியாத்தம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சித்தூர் மார்க்கங்களில் செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இயங்கி வருகிறது.ஆனால் பழைய பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், வேலூர் பெங்களூரு சாலையில் உள்ள லாரி ஷெட் வளாகம் தற்காலிக பஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கிருந்து இன்று முதல் திருவண்ணாமலை, விழுப்புரம் மார்க்கங்களில் செல்லும் பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்காலிக பஸ் நிலையத்தில் அடிப்படை பணிகள் நிறைவடையாததால் இன்று முதல் இயக்கப்பட இருந்த பஸ்கள் இயக்கம் தள்ளி வைக்கப்படுவதாகவும், பழைய பஸ் நிலையத்திலிருந்தே திருவண்ணாமலை, கடலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் பஸ் நிலையத்திற்குள் உள்ளே பஸ்கள் சென்று வருவதற்கு இடையூறு இல்லாத வகையில் பழைய பைபாஸ் சாலையில் உள்ள சென்டர் மீடியனை இடித்து அப்புறப்படுத்தும்படி கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதன்படி வேலூர் கோட்ட மாநில நெடுஞ்சாலைதுறை செயற்பொறியாளர் சரவணன் அறிவுரையின்பேரில் உதவி கோட்ட பொறியாளர் அண்ணாமலை, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் நேற்று சென்டர் மீடியனை அகற்றினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் லாரி ஷெட்டில் இருந்து இயக்கப்படும் தற்காலிக பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் செல்வதற்கு இடையூறாக உள்ள பழைய பைபாஸ் சாலையில் 16 மீட்டர் தூரத்திற்கு சென்டர் மீடியன் அகற்றப்பட்டுள்ளது. இவ்வழியாக திருவண்ணாமலை, கடலூர் மார்க்கமாக செல்லும் பஸ்கள் உள்ளே செல்ல வேண்டும் என்று பஸ் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றனர். படவிளக்கம் வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள சென்டர் மீடியன் நேற்று அகற்றப்பட்டது. இதில், மண்டல துணை பிடிஓ பாரி பாபு, ஊராட்சி செயலாளர் சந்தோஷ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Removal ,Vellore Lorry Shed ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...