×

குமரி தாலுகா அலுவலகங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு

நாகர்கோவில், நவ.1:  குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், கல்குளம், கிள்ளியூர், விளவங்கோடு, திருவட்டார், தோவாளை ஆகிய ஐந்து தாலுகா அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகள் வாயிலாக வழங்கப்பட்டு வரும், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து வகையான சான்றிதழ்கள், பட்டா மாறுதல் ஆணைகள் உள்ளிட்ட பணிகள் குறித்து, ஆய்வு செய்தார். ஆன்லைன் வாயிலாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உடனடியாக ஆய்வு செய்து, உரிய பதில் அளிக்க வேண்டும். விண்ணப்பித்தலின்போது, ஏதேனும் ஆவணங்கள் தேவைப்பட்டால் அதனை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

சான்றிதழ்கள் வழங்குவதில் எவ்வித காலதாமதமும் ஏற்பட கூடாது என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, குருந்தன்கோடு, தக்கலை, கிள்ளியூர், முஞ்சிறை, திருவட்டார், தோவாளை ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கும், மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று பார்வையிட்டு, கிராம ஊராட்சிகள் மற்றும் ஒன்றியங்களில் நடைபெற்றுவரும் சாலைப்பணிகள், தெருவிளக்கு அமைத்தல், உட்கட்டமைப்பு பணிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து, பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடையின்றி வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நடைபெற்றுவரும் திட்டப்பணிகள் தரமானதாக இருக்க வேண்டும் எனவும், பணிகளை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வுசெய்து, பணிகள் தரமானதாக இருப்பதை உறுதி செய்திட வேண்டுமெனவும், அறிவுறுத்தினார். முன்னதாக, கலெக்டர், பத்மநாபபுரம் சப் கலெக்டர் ஷரண்யா அறி யுடன், சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

Tags : Collector raids ,Kumari ,taluka offices ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து