ஆர்.எஸ்.மங்கலத்தில் பூட்டியே கிடக்கும் ஏடிஎம்

ஆர்.எஸ்.மங்கலம், நவ.1:  ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள தேசிய வங்கியில் தான் வரவு செலவு செய்து வருகின்றனர். இவ்வளவு முக்கியமான வங்கிக்கு சென்று பணம் எடுக்கச் சென்றால், வங்கியின் பாதையில் கம்புகளை கட்டி மேலும் பொதுமக்களுக்கு இடையூறாக தடுப்புகளை அமைத்து வைத்துள்ளனர். குறுகலான இடத்தில் ஒரு பகுதி ஏடிஎம் மெஷினுக்கு செல்லும் பாதையும் மறு பக்கத்தில் சிறிய அளவில் ஒரு  இடம் ஒதுக்கி வாடிக்கையாளர்களை அமர வைத்துள்ளனர். அந்த சிறிய இடத்தில் தான் பொதுமக்கள் வங்கி பரிவர்த்தனை செய்வதற்காக காத்துக்கிடக்கின்றனர். அந்த இடம் மிகவும் சிறிய இடம் என்பதால் பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள் மற்றும் ஊனமுற்றோர்கள் போதிய இடமில்லாமல் ரோட்டில் நின்று அவதிப்படுகின்றனர்.

வாடிக்கையாளர்களை உள்ளே செல்ல ஒவ்வொருவராக அனுமதிக்கின்றனர். இந்த குறுகிய இடத்தில் வங்கிக்கு அதிகப்படியான நபர்கள் வந்து காத்து கிடப்பதால் கூட்டம் அதிகமாக இருப்பதோடு கொரோனா நோய் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே வங்கியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்புகளை அகற்றி  வாடிக்கையாளர்களை வங்கியின் உள்ளே சென்று அமர்ந்து, தனிமனித இடைவெளியோடு பண பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கவும், மேலும் டெபாசிட் மெசின், ஏ.டி.எம் மற்றும் வங்கி புத்தகங்களை பிரிண்ட் செய்யும் பிரிண்டர்கள் பழுதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

>