×

வாடிப்பட்டியில் பரபரப்பு மதுரையில் தீபாவளி பண்டிகையையொட்டி தள்ளுபடி விலையில் ஜவுளிகள் விற்பனை

மதுரை, நவ. 1:  மதுரை டாக்டர் அம்பேத்கர் ரோடு ராஜா முத்தையா மன்றத்தில் (தமிழிசை சங்கம்) ஜவுளிகளுக்கான சிறப்பு விற்பனை கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினருக்கும் ஏராளமான மாடல்களில் பல்வேறு ரக ஜவுளிகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. பெண்களை கவரும் வகையில் புதிய டிசைன்கள் சேலைகள், ஜரி ஒர்க், டிரடிஷனல், சொர்ணலதா சில்க், சந்தேரி சில்க் ,பிண்ட் டெட், கிராப் சில்க், போன்றவை விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. சேலைகள் ரூ.150 முதல் ரூ.250 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் முன்னணி நிறுவனங்களின் குர்தீஸ்களும் ஏராளமான டிசைனில் கிடைக்கின்றன. அதில், காட்டன் பார்ட்டி வியர்,  எம் ராய்டட், உமன் டிசைனர் பியூட்டிஃபுல் போன்ற குர்தீஸ்களை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், தள்ளுபடி விலையில் உள்ளாடைகளும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆண்களுக்கு ஜீன்ஸ் பேண்ட்,சட்டைகளும் அதிகமான டிசைன்களில் விற்பனைக்கு உள்ளன. பேண்ட், சட்டை துணிகளும் கிடைக்கிறது. பார்மல், கேஷுவல், பார்டி வியர் போன்ற சட்டைகளும் அதிகளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் டீசர்ட் விதவிதமாக குவித்து வைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான காட்டன் ஜவுளி ரகங்கள் கிடைக்கிறது. மேலும் பேண்ட், சட்டைகள் டீசர்ட், லோயர் ,டாப்ஸ், லேடிஸ் பைஜாமா, பாபா சூட், குர்தீஸ்கள்,  ஃபேன்ஸி டிரஸ், சேலைகள் என 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட எந்த ஜவுளி ரகங்கள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. எந்த ஜவுளி ரகங்களை எடுத்தாலும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. 100 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரையிலான விலையில் தரமான ஜவுளிகள் கிடைக்கிறது. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே இடத்தில் ஜவுளிகளை வாங்கி செல்லாம். இத்தகவலை கண்காட்சியில் ஒருங்கிணைப்பாளர் நூர் கான் தெரிவித்துள்ளார்.

Tags : Vadippatti ,Madurai ,festival ,Deepavali ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...