×

திருமங்கலத்தில் ஜெ. பேரவை ஆலோசனை கூட்டம்

திருமங்கலம், நவ. 1: திருமங்கலத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அமைச்சர் உதயகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என்பது அரசின் கோரிக்கையாகும். எனினும் அரசு பள்ளி மாணவர்களின் படிப்பை நனைவாக்கும் வகையில் அவர்கள் மருத்துவபடிப்பில் சேர 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என சட்டபேரவையில் முதல்வர் அறிவித்து, இதற்காக 7 பேர் கொண்ட குழுவையும் அமைத்தார். இக்குழுவின் பரிந்துரைப்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு அளிக்கலாம் என ஒப்புதல் அளிக்கப்பட்டு பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வரின் தொடர்முயற்சியால் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த சாதனையை பாராட்டும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் சமூகநீதி காவலர் என்ற பட்டத்தை சுட்டி முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஜெ பேரவை மேற்குமாவட்ட செயலாளர் தமிழழகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், அணி அமைப்பாளர்கள் தமிழ்செல்வம், கபிகாசிமாயன், ஜாகாகீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : J. ,wedding ,Council Consultative Meeting ,
× RELATED பா.ஜ.க. திட்டத்தால் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு நெருக்கடி..!!