×

ஐப்பசி மாத பவுர்ணமி சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

பழநி, நவ.1: பழநியில் உள்ள சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதன்படி பழநி அடிவாரம், மதனபுரத்தில் உள்ள அண்ணாமலையார் உண்ணாமுலைநாயகி கோயிலில் நேற்று அன்னாபிஷேகம் மற்றும் வருடாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. நடராஜர் வடிவம் வரைந்து அதில் 108 சங்குகள் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புன்யாவாகனம், கலசபூஜை, ஐபபாராயணம், ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்களில் இருந்த புனித நீர் கொண்டு அண்ணாமலையாருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 16 வகை அபிஷேகம் நடந்தது. இதன் பின் அன்னத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடந்தது. பழநி கோயில் அர்ச்சக ஸ்தானிகர் ராஜசண்முக குருக்கள் பூஜைகளை செய்திருந்தார். பூஜைக்கான ஏற்பாடுகளை அண்ணாமலையார் உண்ணாமுலைநாயகி அறக்கட்டளை தலைவர் நாகராஜன், துணைத் தலைவர் விஜயகுமார், செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags : Annabhishekam ,temples ,Pavurnami Shiva ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு