×

கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் திறக்கப்படுமா?

கொடைக்கானல், நவ. 1: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். கொடைக்கானலில் தற்போது திறக்கப்பட்டுள்ள ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா ,ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து சென்றனர். நேற்று காலை முதலே மிதமான வெயில் அடித்த காரணத்தால், குளிர் குறைந்தது. இந்த இதமான சீதோஷ்ண நிலையில் சுற்றுலா பயணிகள் ரசித்தனர். கொடைக்கானலில் தற்போது திறக்கப்படாமல் உள்ள மற்ற சுற்றுலா இடங்களையும் திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodaikanal ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்