×

அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் கமல்ஹாசன்

சென்னை: போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து நாளை கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த சிறு விபத்தினால் நடிகர் கமல்ஹாசனின் காலில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே கட்சிப் பணி, மற்றும் பிக் பாஸ் உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து கமல் கவனம் செலுத்தி வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது காலில் தொடர்ந்து வலி இருந்து வருவதாகவும், இதனால் மீண்டும் ஒரு சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் அறிக்கை வாயிலாக கமல்ஹாசான் தெரிவித்திருந்தார். இதன்படி கமல்ஹாசனின் காலில் நேற்று முன்தினம் மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவர் விரைவில் மீண்டு வர ரசிகர்கள், மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில்  நாளை கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார். பின்னர் வீட்டில் சில நாட்கள் அவர் ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. …

The post அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் கமல்ஹாசன் appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Chennai ,Porur Ramachandra Hospital ,Dinakaran ,
× RELATED ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட...