×

கறம்பக்குடி அருகே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கறம்பக்குடி, நவ.1: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் அருகே கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தங்கரைவிடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு வாண்டான் விடுதி. வெட்டன் விடுதி அருகே உள்ள தெற்கு வாண்டான் விடுதி. கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அவர்கள் பல ஆண்டுகளாக தங்கள் குடியிருப்பில் உள்ள சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள சாலையில் சீரமைக்க கோரி கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்காமல் உள்ளனர். இதனால் பழுடைந்த சாலையில் செல்வதற்கு அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர் எனவே தெற்கு வாண்டான் விடுதி பொது மக்கள் நலன் கருதி அச்சாலையை சீரமைக்க கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Karambakudy ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...