×

ஐப்பசி பவுர்ணமியையொட்டி சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

உடுமலை, நவ. 1: ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி மடத்துக்குளம் அருகே உள்ள கடத்தூர் ஊராட்சி பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அர்ச்சுனேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. சுயம்பு லிங்கத்திற்கு தயிர், பால், சந்தனம், விபூதி, போன்ற பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, அன்னத்தினால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கொரோனா தொற்றின் காரணமாக, சமூக இடைவெளியை பக்தர்கள் கடைபிடிக்க விதமாக கோயிலுக்குள் குறைந்த எண்ணிக்கையுடைய பக்தர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

அவிநாசி: ஐப்பசி பவுர்ணமியையொட்டி அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் மாலை 4 மணிக்கு அவிநாசிலிங்கேஸ்வரருக்கு பால், தயிர், திருமஞ்சனம், வில்வம், அருகம்புல், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சுவாமிக்கு அன்னம் சாத்தும் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முருங்கை. புடலங்காய், கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்வகைகளினாலும், மாம் பழம், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு உள்ளிட்ட பழ வகைகளினாலும் அவிநாசியப்பருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோல திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில், பழங்கரை பொன் சோழிஸ்வரர் கோயில், கருவலூர் கங்காதீஸ்வரர் கோயில், குட்டகம் மொக்கனீஸ்வரர் கோயில், சேவூர் அறம்வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோயில், பெருமாநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், அன்னாபிஷேகம் நடைபெற்றது.

Tags : Annabhishekam ,temples ,occasion ,Shiva ,Ippasi Pavurnami ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு