முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.91 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

வெள்ளகோவில், நவ.1: வெள்ளகோவில் அடுத்துள்ள முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில்  1690 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.118.10க்கும், குறைந்த பட்சமாக ரூ.79க்கும் ஏலம் போனது. மொத்தம் 1690  கிலோ கொப்பரை 1 லட்சத்து 91 ஆயிரத்து 836க்கும் வர்த்தகம் நடந்தது.  45 விவசாயிகள் பங்கேற்றனர். இதேபோல நடந்த டெண்டர் முறையில் தேங்காய் ஏலத்திற்கு முத்தூர்  சுற்று வட்டார விவசாயிகள் 46 பேர் 8664  தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ  ரூ.40க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.36.55க்கும், சராசரி, ரூ.38.65க்கும் ஏலம் போனது. 3 டன் தேங்காய்கள் மொத்தம் 1 லட்சத்து  19  ஆயிரத்துக்கு ஏலம் போனது என விற்பனைகூட மேற்பார்வையாளர் ரங்கன்  தெரிவித்தார்.

Related Stories:

>