இந்திராகாந்தி நினைவு தினம் அனுசரிப்பு

மஞ்சூர், நவ.1: மஞ்சூரில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. குந்தா வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மஞ்சூரில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு குந்தா வட்டார காங்கிரஸ் தலைவர் நேரு தலைமை தாங்கினார். ஊட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாகராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் சிவக்குமார், பேரூராட்சி கமிட்டி தலைவர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் இந்திராகாந்தியின் திருவுருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதைதொடர்ந்து கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் தாலுகா நிர்வாகிகள் வெங்கிட்டுசாமி, சிவக்குமார், ராஜூபெட்டன், போஜன், குமார், காந்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பிக்கட்டி, கிண்ணக்கொரை, பெங்கால்மட்டம் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திராகாந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Related Stories:

>