ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டுமான பணி: நீதிபதி ஆய்வு

பொள்ளாச்சி, நவ. 1: ெபாள்ளாச்சியில் நடந்து வரும் ஒருங்கிணைந்த நீதமின்ற வளாகம் கட்டுமான பணியை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில், சார்பு நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம், ஜேஎம் 1, ஜேஎம் 2 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.  இங்கு இட பற்றாக்குறையை போக்கவும், இந்த நீதிமன்றங்களை  ஒரே பகுதியில் செயல்படவும், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  

 அதன்படி,  கோவை ரோடு சிடிசி மேடு அருகே, ரூ.35.40 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி  அடிக்கல் நாட்டுப்பட்டு, அதற்கான கட்டுமான பணி துவங்கப்பட்டது.  இந்நிலையில் நேற்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தரம் ஆய்வு மேற்கொண்ட பின்  கூறுகையில், ‘ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டுமான பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாலுகா வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களை ஒருங்கணைந்த நீதிமன்ற புதிய கட்டிடத்தில் அமைவதற்கான நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும்’ என்றார்.  இந்த ஆய்வின்போது, மாவட்ட உரிமையியல் நீதிபதி சக்திவேல், மாஜிஸ்திரேட்டுகள் தங்கமணி கணேஷ், செல்லயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>