×

பூங்காவில் விளையாடும் சிறுவர்கள் கொட்டையூரில் பருத்தி ஏலம்

கும்பகோணம், அக். 30: கும்பகோணம் அடுத்த கொட்டையூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி முன்னிலை வகித்தார். இதில் கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் 47.30 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம் பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். இதில் அதிகபட்ச விலையாக குவிண்டால் ரூ.4,202, குறைந்தபட்சமாக ரூ.3,229, சராசரியாக ரூ.3,600 என நிர்ணயித்தனர். இதன் மொத்த மதிப்பான ரூ.1.70 லட்சத்தை விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

Tags : Cotton auction ,boys ,park ,Kottaiyur ,
× RELATED தமிழ், மலையாளத்தில் சாதித்த நிலையில்...