×

மலபார் கோல்டு- டைமண்ட்ஸ் அறிமுகப்படுத்தும் ‘ஒரே இந்தியா, ஒரே தங்க விலை’

சென்னை, அக். 30: தங்கம், வைர நகைகளின் சில்லறை விற்பனையில் நாட்டிலுள்ள முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கி வரும் மலபார் கோல்டு- டைமண்ட்ஸ் ‘ஒரே நாடு, ஒரே தங்க விலை’ எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இதன்மூலம் தங்கத்தின் தூய்மையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் BIS ஹால்மார்க்குடன் முறைப்படி வாங்கப்பட்ட தங்கத்துக்கான விலையை நாடெங்கிலும் எல்லா மாநிலங்களிலும் ஒரே சீராக நிர்ணயம் செய்ய முடியும். மலபார் கோல்டு- டைமண்ட்ஸ் நிறுவனம் நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு நாடெங்கிலும் சீரான ஒரு தங்க விலையை நிர்ணயம் செய்ய பாடுப்பட்டு வந்தது. ‘ஒரே இந்தியா, ஒரே தங்க விலை’ திட்டமானது நாடெங்கிலும் நுகர்வோர் ஒரே விலைக்கு தங்கம் வாங்குவதை உறுதி செய்யும். மலபார் குழுமத்தின் ‘பைபேக் உத்தரவாதமானது’ நாடெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் தங்கத்தை எங்களிடம் விற்க, பரிவர்த்தனை செய்ய விரும்ப தூண்டும் ஒரு முக்கியமான அம்சமாகும்.

இதுகுறித்து மலபார் குழும சேர்மன் எம்.பி.அகமது கூறுகையில், தங்கத்தின் தூய்மையில் சமரசம் செய்து கொள்ளாமல் நுகர்வோரின் நலனை காப்பதே எமது ‘ஒரே இந்தியா ஒரே தங்க விலை’ திட்டத்தின் நோக்கமாகும். தீபாவளிக்கு வாடிக்கையாளர்கள் தயாராகி வரும் வேளையில், நாடெங்கிலும் உள்ள எங்களது 120 ஷோரூம்களிலும் சீரான தங்க விலை திட்டம் அமல்படுத்தப்படும் என்றார். மலபார் கோல்டு- டைமண்ட்ஸ் குழும இந்திய செயல்பாட்டு நிர்வாக இயக்குனர் அஷர் கூறுகையில், ‘ஒரே இந்தியா, ஒரே தங்க விலை’ திட்டம் இப்பாதையில் நாங்கள் எடுத்து வைக்கும் சரியான படியாகும். மலபார் குழுமத்தின் ‘ஒரே இந்தியா, ஒரே தங்க விலை’ திட்டமானது வாடிக்கையாளர்கள் ஆதாயத்தை உறுதி செய்யும் முக்கிய இலக்கை நிறைவேற்றவும், ஒளிவு மறைவற்ற விற்பனை நிலையை ஏற்படுத்தவும் எடுக்கப்படும் ஒரு முக்கிய படியாகும்.

‘ஒரே இந்தியா, ஒரே தங்க விலை’ திட்டம் சலுகை பிரசாரம் அல்ல. தன்னை ஆதரிப்பவர்களுக்கு இது மலபார் குழுமம் தரும் ‘மலபார் வாக்குறுதி’ ஆகும். ‘மலபார் வாக்குறுதி’ என்பது கவலையற்று ஷாப்பிங் செய்யவும், வாங்குவதை வாழ்நாள் முழுவதும் பாதுகாக்கவும் வாடிக்கையாளர்களுக்கு குழுமம் தரும் தனித்துவமான வாக்குறுதிகளின் ஒரு கலவை. நிலுவையில் உள்ள எங்களது மற்ற சலுகைகளாகிய நகை பரிமாற்றத்தில் 0% கழிவு மற்றும் பை-பேக்குக்கான சிறந்த மதிப்பு ஆகியவை எப்போதும்போல் தொடரும் என்றார்.

Tags : launch ,Malabar Gold - Diamonds ,One India ,
× RELATED புதுச்சேரியில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் புதிய ஷோரூம் திறப்பு