×

பொன்னமராவதி வட்டார வளமையத்தில் 5ம் வகுப்பு எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு திறனறி தேர்வு

பொன்னமராவதி, அக்.30: பொன்னமராவதி பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலெட்சுமி வழிகாட்டுதலின்படி பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட2  அரசு பள்ளிகளில் 2019-2020ம் கல்வி ஆண்டில் ஐந்தாம் வகுப்பு பயின்ற ஆதிதிராவிடர் மாணவ மற்றும் மாணவிகளுக்கு திறனறித்தேர்வு நடைபெற்றது. பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர் பால்டேவிட் ரொசாரியோ தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். பொன்னமராவதி வட்டார வளமையத்திற்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலிருந்தும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் பயின்ற தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் ஆகிய பாடங்களிலிருந்து திறனறித்தேர்வு நடத்தப்பட்டது. இதில் பிள்ளையார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள கனிஷ்கா மற்றும் பிருந்தா ஆகியோர் ஒன்றிய அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்தனர். செம்பூதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் கரண் ஒன்றிய அளவில் மூன்றாம் இடத்தை பெற்றார். ஒன்றிய அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் அன்பழகன், பரிசுத்தம், பச்சமுத்து, மதனகுமார், சரவணன், அழகுராஜா, சரவணன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர் புவனேஸ்வரி செய்திருந்தார்.

Tags : class ,SC and ST ,Ponnamaravathi Regional Resource Center ,
× RELATED இறுதியாண்டு தேர்வு நிறைவு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை