×

தாமதமாக நடந்து வரும் சாக்கடை வடிகால் பணியால் பொதுமக்கள் கடும் அவதி

கரூர், அக். 30: கரூர் வஉசி தெருவில் நடைபெற்று வரும் சாக்கடை வடிகால் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் தாந்தோணிமலை வஉசி தெரு முதல் மில்கேட் வரை பிரதான சாக்கடை வடிகால் அமைக்கும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியின் காரணமாக இந்த பகுதியினர் மாற்று வழியில் கரூர் போன்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சிரமப்பட்டு தங்களின் இல்லங்களுக்கு சென்று வருகின்றனர்.விரைவில் வடகிழக்கு பருவமழை காலம் துவங்கவுள்ளதால் அதற்குள் இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.மழை துவங்கும் பட்சத்தில் பணியை தொடருவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் இந்த பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : public ,
× RELATED மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள்