×

ஜவளகிரி வனப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைப்பு

தேன்கனிக்கோட்டை, அக்.30: ஜவளகிரி அருகே வனத்துறை பங்களா பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையை போக்க ஆழ்துளை கிணறு அமைத்து தருமாறு தளி பிரகாஷ் எம்எல்ஏவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்பேரில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ₹1.25 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்க பிரகாஷ் எம்எல்எ நடவடிக்கை எடுத்து பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், அவைத்தலைவர் நாகராஜ், துணை செயலாளர் முனிராஜ், கவுன்சிலர் சிவண்ணா, ஊராட்சி தலைவர் ரேணுகாபிரசாத், ஜெயப்பிரகாஷ், பரசிவப்பா, நாராயணரெட்டி, புட்டராஜ், குணசேகர், காந்தராஜ், முத்தப்பா, வஜ்ரேஸ், வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : forest ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...