ஜோடுகொத்தூர் கிராமத்தில் பல் நோக்கு கட்டிட பணி துவக்கம் செல்லக்குமார் எம்பி பங்கேற்பு

வேப்பனஹள்ளி, அக்.30: வேப்பனஹள்ளி அருகே நாச்சிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட ஜோடுகொத்தூர் கிராமத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் சுமார் ₹6 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவி இந்திரா நாகராஜ், கவியரசு, முனிராஜ், பைரேசன், நாகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>